சுதந்திர தினத்தை முன்னிட்டு 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவோம்: சென்னை கலெக்டர் வேண்டுகோள்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவோம் என்று சென்னை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிவிப்பு: நாம் நமது 75வது சுதந்திர தின விழாவை சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாட உள்ளோம்.

இந்நாளில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை மதித்துப் போற்றிக் கொண்டாடுவோம். 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை நாம் இந்தியர் என்ற பெருமிதத்தோடு வருகிற 13ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலத்திற்கு நமது இல்லங்களில் தேசியக் கொடி ஏற்றி, நாம் நமது நன்றியை காணிக்கை ஆக்குவோம்.

Related Stories: