×

பர்மிங்காம் காமன்வெல்த் என் வாழ்வில் மிகச்சிறந்த தொடர்: தங்கம் வென்ற சரத் கமல் பேட்டி

சென்னை: பர்மிங்காம் காமன்வெல்த் என் வாழ்வில் மிகச்சிறந்த தொடர் என சரத் கமல் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவரை வரவேற்று மாலை அணிவித்தனர். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற செல்வ பிரபு, பரத், ஸ்ரீதர் ஆகியோருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத் கமல்; பர்மிங்காம் காமன்வெல்த் மிகச்சிறந்த தொடராக எனக்கு அமைந்தது. மதக்கங்களை வென்று திரும்பிய எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் நடைபெறும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாடுவேன். ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை நேற்று சந்தித்தோம்; அவர்கள் விளையாட்டு நுணுக்கங்களை குறிப்பிட்டு கேட்டறிந்தார் இவ்வாறு கூறினார்.


Tags : Birmingham Commonwealth ,Sarath Kamal , Birmingham Commonwealth Best series of my life: Gold winner Sarath Kamal interview
× RELATED சரத் கமல் முன்னேற்றம்