சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று: விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல்

பெய்ஜிங்: கொரோனா பரவலுக்கு இடையே சீனாவில் புதிய வைரஸ் தொற்று பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் கொரோனா பரவல் ஓயாத நிலையில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை விஸ்பரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருவதை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதி செய்தது. Lay-V எனப்படும் லங்யா ஹெனிபா வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. ஷாங்டாங், ஹெனான் ஆகிய தெற்கு மாகாணங்களில் 35 பேர் லங்யா ஹெனிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றை போலவே லங்யா தொற்றுக்கும் காய்ச்சல், சோர்வு, இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றும் என கூறியுள்ள அதிகாரிகள்; எலி போன்ற கொறிக்கும் விலங்குகளிடம் இருந்து இந்த கிருமிகள் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். லங்யா ஹெனிபா கிருமிகள் மனிதர்களை கொள்ளும் அளவுக்கு என்றும் தெரிவித்துள்ள சீன மருத்துவ நிபுணர்கள் இருப்பினும் லங்யா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை தொடங்கி இருப்பதாக கூறியுள்ளனர்.

Related Stories: