எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஜோரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ராணுவ முகாமில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். முகாமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளாரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து ரஜோரி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: