வெம்பக்கோட்டையில் ஆண் உருவம் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு இதுவரையிலும் தோண்டப்பட்ட குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண் விளையாட்டு பொருட்கள், யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குவளை என பல்வேறு வரலாற்று சான்றுகள் கிடைத்தன.

அழகிய ஆண் உருவம் கொண்ட தலையில்லாத சுடுமண் பொம்மை அமர்ந்த நிலையில் நேற்று கிடைத்துள்ளது. முன்ேனார்கள் கை வண்ணத்தில் கலைநயத்துடன் கூடிய வடிவமைப்பில் உள்ள இந்த சுடுமண் பொம்மையின் உடைந்த கால் பகுதி அதன் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: