சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் சுவாமி, கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமாகவும் அருள்பாலித்தார். திருவிழாவில் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா கடந்த ஜூலை 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிகர நிகழ்ச்சியாக  கோமதி அம்பாளுக்கு, சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் தபசுக்காட்சி நேற்று நடந்தது.

இதையொட்டி பகல் 12.15 மணிக்கு கோமதி அம்பாள் தங்கசப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாலை 6.39 மணிக்கு தபசு மண்டபத்தில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு சுவாமி, சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளை கோயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: