சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் காஷ்மீரில் தயாரான தேசியக்கொடி ஏற்றப்படும்: கே.அண்ணாமலை தகவல்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜ மீனவர் அணி சார்பில் நீலாங்கரை கடலில் மூவர்ண கொடியேந்தி பாஜவினர் படகு பேரணியை நேற்று நடத்தினர். நிகழ்ச்சிக்கு, பாஜ மீனவ பிரிவு தலைவர் எம்.சி.முனுசாமி தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் முன்னிலை வகித்தார்.  இதில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு படகு பேரணியை தொடங்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட படகுகளுடன் சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியில்  பங்கேற்றனர்.

பின்னர், அண்ணாமலை பேசியதாவது:ஜம்மு - காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக்கொடியை வரும் 15ம் தேதி சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் ஏற்ற உள்ளோம். பலரையும் சந்தித்து பேசுவது ஆளுநரின் மரபு. ரஜினி உள்பட பலரையும் தொடர்ச்சியாக ஆளுநர் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார். காவிரி  உள்பட தமிழ்நாட்டின் பிரச்னைகளில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து குரல் தந்து வருகிறார். ஆளுநரிடம் ரஜினி பேசியது எந்த தவறும் இல்லை. இந்த சந்திப்பு குறித்து, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்குகின்றன. இது தவறு.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: