சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் 3 பேரும் இணையலாம் ஒருபோதும் அதிமுகவில் அவர்கள் இணைய முடியாது: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பி.எஸ் மூவரும் வேண்டுமானால் இணையலாம். ஆனால், ஒருபோதும் அதிமுக கட்சியில் அவர்கள் இணைய முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் உள்ள பெரியபாளையத்தமன் கோயிலின் 41வது ஆண்டு ஆடித் திருவிழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ரெய்டு, ரெய்டு என்று சொல்கிறார்கள். எனக்கு தெரிந்ததெல்லாம் சைக்கிள் ரெய்டுதான். வேறு எந்த ரெய்டும் எனக்கு தெரியாது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரும் வேண்டுமானால் இணையலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிமுக கட்சியில் இணைய முடியாது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: