வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

சென்னை:  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்   வெளியிட்ட அறிக்கை: சீர்காழி அருகே கொள்ளிடத்தில் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வெள்ளநீர் புகுந்து பலநூறு ஏக்கர் நிலத்தில் பியிரிடப்பட்டுள்ள பருத்தி, காய்கறிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளது.

அதிகமான பாதிப்பிற்குள்ளான பகுதிகள் நாதல்படுகை, பில்படுகை மற்றும் முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கிராமங்கள் ஆகும். இப்பகுதியில் தோட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டது. ஆகவே தமிழக அரசு உடனடியாக வெள்ளநீர் வடிந்தவுடன் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கும், செங்கல் உற்பத்தியாளார்களுக்கும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடுகளை காலதாமதம் இல்லாமல் வழங்கவேண்டும்.

Related Stories: