போக்குவரத்து தொழிற்சங்கம் வரும் 16ம் தேதி உண்ணாவிரதம்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வரும் வரும் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பேரவை நிர்வாகிகள் அளித்த பேட்டியில், ‘14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்தல், ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி பணப்பலன்களை வழங்குதல், நிலையாணைக் குழுவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை சேர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, வரும் 16ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.  

சென்னை, பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார். இதில் மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் பங்கேற்க உள்ளனர்’ என்றனர்.

Related Stories: