எல்இடி பல்பை விழுங்கிய குழந்தை: ஆபரேஷனில் அகற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 10 மாத குழந்தை விழுங்கிய எல்இடி பல்பை, 1 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் டாக்டர்கள் அகற்றினர். அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சங்கர். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சபீதாபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள். 2வது குழந்தை தமிழ்முகிலனுக்கு 10 மாதமே ஆகிறது. கடந்த 7ம் தேதி குழந்தை தமிழ் முகிலன் விளையாட்டு காரில் உள்ள ஒரு இன்ஜ் எல்இடி பல்பை எடுத்து விழுங்கி விட்டான். பெற்றோர் குழந்தையை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மூச்சு குழாயில் 2 சிறிய கம்பிகளுடன் எல்இடி பல்பு இருந்தது தெரிந்தது. இதையடுத்து சிறுவனுக்கு நேற்றுமுன்தினம் ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் எல்இடி பல்பை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.  இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், குழந்தை விழுங்கிய பல்பு மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் ஆபரேஷன் மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றனர்.

Related Stories: