டிவிட்டர் வழக்கு செலவுக்காக ரூ.55 ஆயிரம் கோடி பங்குகள் விற்பனை: எலான் மஸ்க் அறிவிப்பு

நியூயார்க்: டிவிட்டர் வழக்கு செலவுக்காக, டெஸ்லா நிறுவனத்தின் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார். உலகின் நம்பர்-1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.5 லட்சம் கோடியில் வாங்குவதாக விலை பேசினார். இதற்கு டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்ட நிலையில், அதில் போலி கணக்குகள் அதிகளவில் இருப்பதாக மஸ்க் குற்றம்சாட்டினார். அதை வாங்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நடத்தும் செலவுக்காக, மஸ்க் தனது பேட்டரி கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.55,300 கோடிக்கான பங்குகளை திடீரென விற்றுள்ளார். சமீப நாட்களில் அவர் 80 லட்சம் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும், தற்போது வரையிலும் டெஸ்லா, டிவிட்டர் இரு நிறுவனத்திலும் அதிக பங்குகளை கொண்டவராக மஸ்க் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: