ரேஷனில் தேசப்பற்றை விற்பதா? ராகுல் காந்தி தாக்கு

புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, நாளை முதல் 3 தினங்களுக்கு சமூக வலைதளங்களில் டிபி.யாகவும் வீடுகளிலும் மூவர்ண கொடியை வைக்க அரசின் பல்வேறு துறைகளும் மக்களை வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில், ஏழைகளின் சுயமரியாதையை புண்படுத்தி, தேசப்பற்றை பாஜ கூறுபோட்டு விற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ‘‘தேசப்பற்றை ஒருபோதும் விற்க கூடாது. ரேஷன் பொருட்கள் வாங்கும் ஏழைகளிடம் தேசியக்கொடிக்காக கடைக்காரர்கள் கூடுதலாக ரூ.20 வசூலிக்கின்றனர். இது மிகவும் வெட்கக் கேடானது. இதன் மூலம் மூவர்ணக் கொடியை மட்டுமின்றி ஏழைகளின் சுய மரியாதையையும் பாஜ புண்படுத்தி உள்ளது,’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: