2 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள கான்சாகிப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த  தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Stories: