தவறு செய்து விட்டேன் கைதான தியாகியின் வீடியோ வைரல்

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்த பாஜ நிர்வாகியான ஸ்ரீகாந்த் தியாகி, செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். தனது குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண்ணுடன் இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவரை திட்டியதோடு, திடீரென தள்ளி விட்டார். இந்த வீடியோ வைரலாகி பரவியதால் சர்ச்சை ஏற்பட்டு, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், தலைமறைவான அவரை 4 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்படும் முன்பாக தியாகி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ‘அவர் எனது சகோதரியை போன்றவர். தவறு செய்து விட்டேன். அதை உணர்ந்து விட்டேன். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் விரும்பினால், அதனை செய்கிறேன். நான் ஆத்திரத்தில் அவரை பேசிய வார்த்தைகளை பிறகு உணர்ந்தேன். என் வாழ்க்கையில் அதுபோன்ற வார்த்தைகளை யாருக்கு எதிராகவும் இனி பயன்படுத்த மாட்டேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: