ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இடையே பேசிய முதல்வர் கெஜ்ரிவால், ‘‘ஆம் ஆத்மிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். இது உங்களின் உரிமை. மக்களின் பணம் சுவிஸ் வங்கிக்கு செல்லக்கூடாது. மக்களை சென்றடைய வேண்டும்’’ என்றார். முதல்வர் கெஜ்ரிவால் குஜராத்தில் 5வது வாக்குறுதி இதுவாகும். ஏற்கனவே இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 உதவி தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: