சொல்லிட்டாங்க...

* எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு - போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்து விடக் கூடாது. வளர விட்டுவிடவும் கூடாது. - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விழித்துக் கொண்டார். பாஜவை தனிமைப்படுத்த வேண்டும் என்கிற கூக்குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்

* ஆர்எஸ்எஸ் தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு ‘பி’ டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் ‘பி’ டீம் ஆகவும் பாஜ செயல்படுகிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற கனவு நனவாக வேண்டும்  என்றால், போதை அரக்கனை ஒழிப்பதற்கான பணிகள் நாளுக்குநாள்  தீவிரப்படுத்தப்பட வேண்டும். - பாமக தலைவர் அன்புமணி

Related Stories: