விழுப்புரம் அருகே பழுது பார்க்கப்பட்டு வரும் பழைய சிறுபாலத்தின் தற்போதைய நிலை குறித்து இரண்டாவது முறையாக எ.வ.வேலு ஆய்வு

விழுப்புரம்: சென்னை - திருச்சி பிரிவு சாலையில், ஆத்தூர் சுங்கச் சாவடியினை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில், ஓங்கூர் அருகே பழுது பார்க்கப்பட்டு வரும் பழைய சிறுபாலத்தின் தற்போதைய நிலை குறித்து, இரண்டாவது முறையாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் சைதன்யா, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்ந.பாலமுருகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ்  மற்றும் கோட்டப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: