நுபுர் சர்மாவுக்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படவுள்ள அனைத்து வழக்குகளும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடவும் நுபுர் சர்மாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்ஐடி விசாரணை தேவை என்ற மேற்கு வாங்க அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: