2 தடுப்பூசி போட்டவர்களுக்கு ‘கோர்பிவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோர்பிவேக்ஸை செலுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முதல் இரண்டு தவணைகளாக கோவாக்சின்  அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது  முன்னெச்சரிக்கை தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு  வருகிறது.   

இந்நிலையில் முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோர்பிவேக்ஸ்  தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி  இரண்டு தவணைகளாகச் செலுத்திக்கொண்ட தடுப்பூசிக்கு பதிலாக வேறொரு  தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாகச் செலுத்திக் கொள்ள ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசியாக கோர்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோர்பிவேக்ஸ் செலுத்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனையில், நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பது தெரியவந்ததால், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் ஒப்புதலின் அடிப்படையில் தற்போது கோர்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: