தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு...

டெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. குறிப்பாக, இதில் தமிழகத்தில் ரூபாய் 4,758 கோடி விடுவித்திருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வு தொகையாக இந்த மாதம் இரண்டு தவணையும் சேர்த்து ஒரே தவணையாக ரூபாய் 1.16 கோடியை ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூபாய் 58,332 கோடி நிதி விடுவிக்கப்படும். ஆனால், இந்த மாதம் இரண்டு மாத தவணைகளையும் சேர்த்து ஒரே தவணையாக ஒன்றிய அரசு சுமார் 1.16 கோடி ரூபாய் விடுவித்திருக்கிறது.

குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு வரி பணம் அளிக்கப்பட வேண்டும் என்று நிதிகுழு ஒரு பரிந்துரை வழங்குகிறது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரி பகிர்வானது மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு இரண்டு தவணைகளையும் சேர்த்து 4,758 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. குறிப்பாக, மாநிலங்கள் தங்களுடைய முதலீட்டு மற்றும் இதர செலவினங்களை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்கிற ஒன்றிய அரசின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு தவணையை ஒரு தவணையாக ஒன்றிய அரசு  விடுவித்தது.       

Related Stories: