நாயக்கன்பேட்டை ஊராட்சியில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

வாலாஜாபாத்: நாயக்கன்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை புதிய வகுப்பறை கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

  காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பேட்டை ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க போதிய வகுப்பறை இல்லாமல் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தனர். இதனால் மரத்தடி, திறந்தவெளியில் பாடம் படிப்பதில் பெரிதும் சிரமப்பட்டனர்.

 

இதைத் தொடர்ந்து, இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டி தரவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், இப்பள்ளியில் ₹18.75 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுதவற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்று, புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், இங்கு புதிதாக கட்டப்படும் 2 வகுப்பறை கட்டிடங்களையும் தரமான முறையில் கட்டி முடிக்க வேண்டும் என க.சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தினார்.

இதில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், மாவட்ட அறநிலைய குழு தலைவர் தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ரீட்டா, ஒன்றியக்குழு உறுப்பினர் சஞ்சய் காந்தி, பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி, திமுக பிரமுகர்கள் விக்டர் செல்வகுமார், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: