தமிழன் என்ற முறையில் பெருமிதம் அடைகிறேன்!: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு..!!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசு, தன்னார்வலர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நிகல் சரின், அர்ஜுன், மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் ஒலிம்பியாடையும், அதன் தொடக்க, நிறைவு விழாக்களையும் மிகச்சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும், விழாக்களை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின்  வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த உலகமும் இதை பார்த்து அறிந்தது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, போட்டிகள், நிறைவு விழாவை கண்டு தமிழன் என்ற முறையில் பெருமை, பெருமிதம் அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: