வைகையில் மூழ்கி வாலிபர் பலி

சோழவந்தான்: மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யங்காளை மகன் அன்பரசன் (25). இதே ஊரை சேர்ந்தவர் வினோத்குமார் (25). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணி புரிந்து வந்தார். இவர்கள் இருவர் உள்பட நண்பர்கள் 6 பேர் சோழவந்தான் அருகே வைகையாற்று தடுப்பணையில் நேற்று மதியம் குளிக்க சென்றனர். முதலில் இறங்கிய அன்பரசன், வினோத்குமார் இருவரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக நண்பர்கள் காடுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அன்பரசன் உடல் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான வினோத்குமாரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: