டோல்கேட்டில் தாமதம் தட்டிக் கேட்டவர் மீது சரமாரியாக தாக்குதல்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த பெண். கால்நடை மருத்துவர். உடல் நலக்குறைவு காரணமாக மகனுடன் நேற்று மதுரைக்கு காரில் சென்றார். திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டினை கடக்க முயன்ற போது, முன்னால் நின்ற கேரளா வாகனத்தால் செல்ல முடியவில்லை. கேரள வாகனத்திற்கான பாஸ்டேக் ஸ்கேன் ஆகாததால், நீண்டநேரம் தாமதமானது. இதனால், பொறுமை இழந்த டாக்டரின் மகன் காரினை விட்டு இறங்கி டோல்கேட் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் டாக்டரின் மகனை சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க  முயன்ற பெண் டாக்டரை காரினை விட்டு இறங்க விடாமல் ஊழியர்கள் தடுத்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் விலக்கி விட்ட பின்பு டாக்டரின் கார் டோல்கேட்டினை கடந்து சென்றது. இதுதொடர்பாக அந்த பெண் டாக்டர், ஒருவரிடம் பேசிய ஆடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, டோல்கேட் ஊழியர்கள், பெண் டாக்டரின் மகன் மீது போலீசில் புகாரளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: