×

எரிபொருள் விலை சரிந்தால் விமான கட்டணங்களை குறைக்க அரசு திட்டம்

புதுடெல்லி: விமான எரிபொருள் விலை குறைந்தால், விமான கட்டணங்களை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பீதி வெகுவாக குறைந்துள்ளதை தொடர்ந்து, விமான போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது. விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, விமானங்களுக்கான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, விமான பயண கட்டணங்களும் அதிகரித்துள்ளன. தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டணம் பரிசீலிக்கப்படுகிறது. இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று கூறுகையில், ‘விமான நிறுவனங்களின் கட்டணத் தொகை குறைவாக இல்லை. அதேபோல், மிக அதிகமாகவும் கட்டணம் இல்லை. இருப்பினும், விமான எரிப்பொருள் விலை குறைவை கவனித்து வருகிறோம். இதன் விலை குறைவு மேலும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். அப்போது, உள்ளூர் விமான கட்டணம் குறித்து மறுமதிப்பீடு செய்யப்படும்” என்றார்.Tags : Govt , Govt plan to reduce air fares if fuel prices fall
× RELATED திருவாடானை பகுதியில் ஆக்கிரமிப்பில்...