பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் மிர்ச்சி பாபா கைது

போபால்: மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்தியும் தோல்வி அடைந்ததும், சமதி அடைய போவதாகவும் கூறி புகழ் பெற்றவர் மிர்ச்சி பாபா என்று செல்லமாக அழைக்கப்படும் சுவாமி வைராக்யானந்த் கிரி. இவர் மீது பெண் பக்தை ஒருவர் போபால் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த தனக்கு இவரது தொடர்பு கிடைத்தது.

கடந்த 17ம் தேதி சாமியாரை சந்தித்த போது, அவர் கொடுத்த தீர்த்தத்தை வாங்கி குடித்த சில நிமிடங்களில் மயக்கமடைந்து விட்டேன். பின்னர், அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. சமூக அவமதிப்புக்கு அஞ்சி சாமியார் மீது உடனடியாக புகார் அளிக்கவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சாமியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டு போபால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: