இஸ்ரேல் தாக்குதலில் 3 பாலஸ்தீனியர் பலி

ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் குழுக்கள் இடையே கடந்த மூன்று நாட்களாக சண்டை நடைபெற்ற நிலையில்,  இரு தரப்பும் தங்களின் தாக்குதலை நிறுத்துவதற்கு நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டன. இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக, பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேற்கு கரை பகுதியில் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இப்ராகிம் அல் நபுல்சியின் வீட்டை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், அல் நபுல்சியும், 2 பாலஸ்தீனிய தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அந்த வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாலஸ்தீனியர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் காயமடைந்து இருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories: