×

திருப்பதியில் ஏழுமலையானை அரை நாள் காத்திருந்து தரிசனம் செய்த மக்கள்: ரூ.4.79 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் நேற்று முன்தினம் 74,830 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 39,405 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ₹4.79 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியிருந்தது. பக்தர்கள் டிபிசி கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், 14 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Seven Mountain Elephant ,Tirupati , People who waited half a day for darshan of seven mountain elephants in Tirupati: Rs 4.79 crore donation
× RELATED திருப்பதியில் நாளை கொடியேற்றத்துடன்...