4 நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்ற தொடர் முடிக்கப்பட்டது ஏன்? ஒன்றிய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 நாட்கள் முன்னதாக நேற்று முன்தினத்துடன் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாலாத் ஜோஷி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மழைக்கால கூட்டத் தொடரை 4 நாள் முன்கூட்டியே முடிக்கவில்லை.

2 நாள் விடுமுறையுடன் சேர்த்து, 2 நாள் மட்டுமே முன்கூட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது கூட எதிர்க்கட்சிகள் உட்பட எம்பிக்களின் கோரிக்கைக்கு உட்பட்டே எடுக்கப்பட்ட முடிவாகும். அவையில் விவாதம் நடத்த வேண்டுமென சொல்லும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் அவையை புறக்கணிப்பதும், குறுக்கீடு செய்வதுமாகத்தான் உள்ளது. பொது நலனை விட ஒரு குடும்பத்தை பாதுகாப்பதில்தான் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர்,’ என கூறியுள்ளார்.

Related Stories: