புதிய கட்டிடத்தில் குளிர்கால தொடர்; கட்டுமான பணிகள் மும்முரம்

புதுடெல்லி: பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடர்தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய விஸ்டா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 64,500 சதுர மீட்டர் பரப்பில் ₹971 கோடி செலவில் நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனை தாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் டாடா நிறுவனம் சார்பில் புதிய நாடாளுமன்ற கட்ட 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டது.

ஆனால், பணிகள் முடியாததால் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. சமீபத்தில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத் தொடர்தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த நடக்க உள்ள குளிர்கால கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டின் 75 சுதந்திர ஆண்டிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க, பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறது. எனவே, கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related Stories: