தொழிலதிபரை மாடல் அழகி மடக்கியது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னை: சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. பூந்தமல்லி பஸ்நிலையம் அருகே நிதி நிறுவனம் மற்றும் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சேகர் (41), ராஜேஷ் (37). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ராஜேஷுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. சேகரின் மனைவிக்கு சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில்தான், சேகருக்கு பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர் ஒருவர் மூலம், வேளச்சேரியை சேர்ந்த ஸ்வாதி (20) அறிமுகமானார். முதல் சந்திப்பிலேயே ஸ்வாதியின் அழகில் சேகர் மயங்கினார்.

ஆரம்பத்தில் சினிமா மற்றும் மாடலிங் தொழில் செய்து வந்தார் ஸ்வாதி. வாய்ப்புகள் கிடைக்காததால் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். ஒருவருடன் நெருக்கமாக இருக்க ₹15 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் ரேட் பிக்ஸ் செய்து வாங்கியுள்ளார். அடிக்கடி ஸ்வாதியுடன் நெருக்கமாக இருந்த சேகர் பணத்தை அள்ளி வீசினாராம். ஒரு கட்டத்தில் ‘உனக்கு இந்த ெதாழில் எதற்கு, பேசாமல் என்னுடனே இருந்துவிடு. நீ கேட்பதையெல்லாம் செய்து தருகிறேன் என்று ஸ்வாதியிடம் சேகர் தெரிவித்துள்ளார்.  அதற்கு ஸ்வாதியும் சரி என்று சொல்லி, சேகருடன் ரகசியமாக வேறு வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் தன் பைனான்சில் இருந்த நகை, பணம் மாயமானது குறித்து, தமிழ்செல்வி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சேகரிடம் விசாரித்தபோது ஸ்வாதியிடம் நகைகளை கொடுத்தது தெரியவந்தது. பின்னர், ஸ்வாதியை போலீசார் பிடித்தனர். அவரும் நகை, பணத்தை வாங்கியதை ஒப்புக் கொண்டார். விசாரணையின்போது, ஸ்வாதி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: டிப்ளமோ முடித்துள்ள ஸ்வாதிக்கு, திருமணமாகி குழந்தை உள்ளது.

கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சினிமாவில் நடிக்க முயற்சி செய்து தோற்றுபோனார். எனினும் இவரது சினிமா ஆசையை பயன்படுத்தி புரோக்கர்கள் சிலர், அவரை பாலியல் தொழிலில் தள்ளினர். அவர்கள் மூலம் நல்ல வருமானம் கிடைத்ததால் பாலியல் தொழிலை நிரந்தரமாக்கிக் கொண்டார். இது கணவருக்கு தெரிந்தவுடன் சண்ைட போட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டார். பின்னர், ஆண்களுடன் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே தங்குவார். அப்படி பல பணக்கார நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல்களில் மது அருந்துவது, விடிய விடிய கும்மாளம் போடுவது என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அப்போதுதான் சேகரின் அறிமுகமும் கிடைத்துள்ளது. ஸ்வாதியின் அழகில் மயங்கியதால், சேகரிடம் இருந்து ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்துள்ளார். இதுவரை ₹30 லட்சம் வரை ஸ்வாதிக்கு செலவு செய்துள்ளார் சேகர். மேலும் தனக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் சேகருக்கு போன் செய்து பணம், நகைகளை வாங்கி வந்துள்ளார்.

இதுவரை சுமார் 500 சவரன் தங்கத்தை கட்டியாகவும், நகையாகவும் வாங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல 200 சவரன் நகைகளை சேகரிடம் இருந்து ஸ்வாதி வாங்கியுள்ளார். இதுகுறித்து தமிழ்செல்வி கேட்டதும் சேகர் உண்மையை கூறியுள்ளார். இதனால் தமிழ்ச்செல்வி, தனது உறவினர்களுடன் சென்று ஸ்வாதியை மிரட்டி நகையை வாங்கி வந்துள்ளார். தற்போது மீண்டும் 500 சவரன் நகை, ₹30 லட்சம் ரொக்கப் பணத்தை காணவில்லை. இது குறித்து சேகரிடம் கேட்டபோதும், ஸ்வாதியிடம் கொடுத்துள்ளதாகவே கூறியுள்ளார். இதனால் ஸ்வாதியை தனது உறவினர்களுடன் சென்று தமிழ்செல்வி தேடியுள்ளார். ஆனால் தனது தாயாரிடம் உண்மையை கூறிவிட்டதாக ஸ்வாதியிடம் சேகர் கூறியதால், அவர் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால்தான், தமிழ்செல்வி போலீசில் புகார் செய்துள்ளார்.

ஆனால் இந்த பிரச்னைக்கு மத்தியிலும் சேகர், திடீரென்று ஸ்வாதிக்கு போன் செய்து பூந்தமல்லியில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார். நள்ளிரவில் ஓட்டலுக்கு வந்து சேகருடன் ஸ்வாதி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தகவல் தமிழ்செல்வியின் உறவினர்களுக்கு தெரியவந்தது. அதை தொடர்ந்து, ஓட்டலுக்கு சென்று ஸ்வாதியை பிடித்து வந்த உறவினர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்து 5 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 கட்டிகளை செலவு செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் போலீசுக்கு தமிழ்செல்வியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான போலீசார் ஸ்வாதியிடம் விசாரித்தபோது, எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டார். மேலும், தனக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளனர்.

தான் நண்பர்களுடன் சுற்றுவதற்காக 4 சொகுசு கார்களை சேகர் வாங்கிக் கொடுத்துள்ளார். ₹10 லட்சம் செலவில் பைக்கையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த பைக்கை என்னுடைய காதலன் வைத்துள்ளார். அவர் கொடுக்கும் பணத்தை நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிட்டும், மது அருந்தியும் செலவு செய்து விட்டேன். நகைகளை விற்று செலவு செய்துவிட்டேன். நானாக நகை, பணம் கேட்கவில்லை. என்னுடன் சேகர் உல்லாசமாக இருந்து விட்டு அதற்காக எனக்கு நகையை போட்டு ரசிப்பார். என்னை நிர்வாண நிலையில் நிற்க வைத்து நகைகளை போட்டு ரசிப்பார். பணமும் வாரி கொடுப்பார். நான் அவரை சந்தோசமாக வைத்துக் கொண்டேன். அவர் என்னை சந்தோசமாக வைத்துக் கொண்டார் அவ்வளவுதான் என்றார். போலீசில் ஸ்வாதி பிடிபட்டபோது ஒரு பயமோ, வெட்கமோ இல்லை. ஏதோ பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளதுபோல பயமே இல்லாமல் நடந்து கொண்டார். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: