சூப்பர் எர்த் என்ற கோளில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளது: நாசா

சென்னை: பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ள, சூப்பர் எர்த் என்ற கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சூப்பர் எர்த் கோளை சுற்றி முடிக்க வெறும் 10.8 நாட்கள் ஆகும். பூமியில் இருந்து 37 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகம் சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை தான் சுற்றி வருகிறது. இந்த கிரகம் சுற்றுவட்டபாதையில் நேராக செல்லாமல் உள்ளேயும் வெளியேயும் மாறிமாறி செல்கிறது. இருப்பினும், மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில் இதன் வெப்பம் குறைவாகவே உள்ளதால் இதில் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ராஸ் 508பி என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படும் இந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

ஏனென்றால், இதன் மேற்பரப்பில் நீர் உருவாக்கத்திற்கு உகந்த வெப்பநிலை உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு சுற்றி வருகின்ற ராஸ் 508பி நட்சத்திரத்தில் இருந்து குறைவான தூரத்திலும் அல்லது தொலைவான தூரத்திலும் இருக்கக்கூடாது. ஏனென்றால் தூரம் குறைவாக இருந்தால் நீர் ஆவியாகிவிடும். தொலைவில் இருந்தால் உறைந்துவிடும். எனவே நீர், அதன் தன்மையுடன் இருக்கும்போதுதான் உயிரினங்கள் வாழ ஏற்றதாக இருக்கும். ராஸ் 508பி சரியாக தூரத்தில் இருப்பதால், மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில் இதில் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: