மகளிர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்று சாதனை

செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவு 11வது சுற்றில் நேற்று அமெரிக்க அணியுடன் மோதிய இந்திய அணி 1-3 என்ற கணக்கில் போராடி தோற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இந்திய வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, வைஷாலி இருவரும் அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் ஆட்டங்களை டிரா செய்து தலா அரை புள்ளி பெற்ற நிலையில், தானியா சச்தேவ் மற்றும் குல்கர்னி பக்தி அதிர்ச்சி தோல்வியடைந்தது இந்திய அணியின் தங்கப் பதக்க வாய்ப்பை பறித்துவிட்டது.  

உக்ரைன் அணி தனது 11வது சுற்றில் போலந்து அணியை எதிர்கொண்டது. அதில் அபாரமாக விளையாடிய உக்ரைன் 2 வெற்றி, 2 டிரா செய்து 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அஜர்பைஜான் அணியை 3-1 என வீழ்த்திய ஜார்ஜியா அணி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

Related Stories: