சொல்லிட்டாங்க...

‘ஹம் தோ, ஹாமாரே தோ’ என்ற லாபத்திற்காக புதிய விதிகள், நிபந்தனைகளை கொண்டு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடக்கிறது. - காங்., முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. இப்போது, அரசியல் அலுவலகமாகவும் மாற்றப்படுகிறது. இது, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமானது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

வழக்கு மூலம் எங்களை முடக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் முடியாது. கடந்த தேர்தலில் அதிமுக தோல்விக்கு நம்முடன் இருந்த துரோகிகள்தான் காரணம். - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: