இலங்கைக்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர் பறிமுதல்: 2 பெண்கள் கைது

சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இலங்கையை சேர்ந்த 2 இளம்பெண்கள், சுற்றுலா பயணிகளாக வந்துவிட்டு திரும்ப இருந்தனர். அவர்கள் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர். சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி உடைமைகளை சோதனையிட்டனர். எதுவும் இல்லை. இதையடுத்து இருவரையும், பெண் சுங்க அதிகாரிகள் தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். உள்ளாடைக்குள், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.20.89 லட்சம். இருவரையும் கைதுசெய்து, வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் வெளிநாட்டு பணத்தை கொடுத்து அனுப்பியது யார், இலங்கையில் யாரிடம் கொடுக்க உள்ளனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: