போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என பாமக நிறுனவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதால் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 80 ஆயிரம் மூத்த குடிமக்கள் கடந்த 81 மாதங்களாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவதால் சராசரியாக மாதம் ரூ.1500 மட்டுமே கூடுதலாக வழங்க வேண்டியிருக்கும். தமிழக அரசின் பட்ஜெட் மதிப்புடன் ஒப்பிடும் போது இது பெரிய சுமை அல்ல. எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வை, நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும்.

Related Stories: