ஆன்மிக பாதையில் என் வாழ்க்கையை நடத்துகிறேன்: பாஜ தலைவர் அண்ணாமலை பேச்சு

சென்னை: ஆன்மிக பாதையில் என் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசினார். திருக்கழுக்குன்றத்தில் சிவனடியாரான தாமோதரன் என்பவரை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார். பின்னர், வேதகிரீஸ்வரர் ஆலய சிவாச்சாரியர்கள் அண்ணாமலைக்கு மாலையணித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, கட்சியினரிடையே அண்ணாமலை பேசுகையில், ‘‘இளைய தலைமுறையினர் வாட்ஸ் - அப், பேஸ்புக், யு டியூப், நல்ல உணவு, நல்ல உடை என வாழ்க்கையை தொடர்கின்றனர். இளைய தலைமுறையினர் சிவாச்சாரியார்களாகவும், முற்றும் துறந்தவர்களாக வாழ்க்கை பாதையில் பயணிக்க வேண்டும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்கு நான் சார்ந்த, கட்சியும் போராடிக் கொண்டிருக்கிறது. நானும் முற்றும் துறந்த மனிதனாக முயற்சி எடுத்து அந்த நிலையை நோக்கி, ஆன்மிக பாதையில் எனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன் என பேசினார்.

Related Stories: