மாணவர்கள், பேராசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் ‘ஹர் கர் திரங்கா’ என்ற ஹேஷ்டேகில் பதிவிட வேண்டும்: யுஜிசி அறிவுரை

சென்னை: 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு, ‘ஹர் கர் திரங்கா’ என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் தேசபக்தி விழிப்புணர்வு நிகழ்வை மத்திய, மாநில அரசுகள் கடந்த ஓராண்டாக முன்னெடுத்து வருகின்றன.

அதன்ஒருபகுதியாக ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி’ என்ற பொருள்படும் ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரமும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; மத்தியக் கலாச்சாரத்துறை அமைச்சகம் https://harghartiranga.com/ என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நாட்டு மக்கள் தேசியக் கோடியை ஏற்றி அதை செல்போனில் புகைப்படம் எடுத்து மேற்கண்ட தளத்தில் பதிவேற்றலாம். இதையடுத்து கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் இந்த இணையதளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் ‘ஹர் கர் திரங்கா’ என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி பதிவுகள் இடுவதுடன், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை தங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: