ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: செப்டம்பரில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி (டெட்) தேர்வு நிர்வாக காரணங்களால் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்திற்கான டெட் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. நடப்பாண்டிற்கான டெட் தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதில் தாள்-1க்கான தேர்வு முதற்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நிர்வாக காரணங்களால், தாள்-1க்கான தேர்வுகள் 10.9.2022 முதல் 15.9.2022 வரை நடைபெற உள்ளது. இந்த கணினிவழி தேர்விற்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு இருந்து வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இதுகுறித்த அறிவிப்பு, தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: