வைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் நீர்திறப்பு அதிகரிப்பு; நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி: வைகை அணை, சோத்துப்பாறை அணைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் குளங்கள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடி எட்டிய நிலையில் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரப்பு வினாடிக்கு 2707  கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3996 கன அடி நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை அதன் முழு அளவான 126.28 அடியை  கடந்த 3-ஆம் தேதி எட்டிய நிலையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து  அணையில் உபர் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 131 கன அடி வரும் நிலையில் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதை போன்று கிரிவலம் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. மஞ்சளாறு அணைக்கு வரும் 46 கன அடி நீரும் மஞ்சளாற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்தில் மூன்று முக்கிய அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் அதை சுற்றியுள்ள குளங்களும், கண்மாய்களும் நிரம்பி வருகின்றன. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: