3 குழந்தைகளை கொன்ற தாய் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சதா குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கா.உண்ணாமலை பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன்(42). இவரது மனைவி அமுதா(35). கடந்த 5ம் தேதி கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அமுதா தனது குழந்தைகளான நிலவரசன்(5), குரல் அரசன்(3) யாஷினி(ஏழு மாத குழந்தை) ஆகிய 3 பேருடன் வாழவச்சனூர் தென்பெண்ணை ஆற்றில் இடுப்பில் புடவையை கட்டிக்கொண்டு குதித்தார்.

அமுதாவின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியில் ஆடு மேய்த்து இருந்தவர்கள் அவரை பிடித்து தூக்கியபோது மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர். அமுதாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்ைச முடிந்ததும், நேற்று வாணாபுரம் போலீசார், மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்ததாக அவரை கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Related Stories: