தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: இன்று காலையில் ரூ.240 உயர்ந்தது, பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை இன்று காலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. அதே நேரத்தில் பவுன் மீண்டும் 39 ஆயிரத்தை தாண்டியது. விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று கலக்கமடைய செய்துள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு கடந்த ஜூலை 1ம் தேதி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்தது. பவுனுக்கு ரூ.1,100 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,845க்கும், பவுன் ரூ.38,760க்கும் விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,850க்கும், பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.38,800க்கும் விற்கப்பட்டது. இன்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்வை சந்தித்தது. இன்று காலையில் மட்டும் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,880க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு பவுன் ரூ.39,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோரை சற்று கவலையடைய செய்துள்ளது.

Related Stories: