கொடைக்கானல் சாலை துண்டிப்பு அதிவிரைவாக நடைபெறும் சீரமைப்பு பணிகள்: நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் ம‌லைச்சாலையில் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் எதிரொலியாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 2 இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டதுடன், மண்சரிவும் ஏற்பட்டது.இதனால் இந்த வழியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்ததோடு, சாலை சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்கினர்.இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சாலை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக மழைப் பொழிவு சற்று குறைந்ததால் சாலைகளில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.மழை வெள்ளத்தால் மண் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உதவியுடன் மண் மூட்டைகளை அடுக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன் வாயிலாகஅங்கு தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது, சாலை சீரமைப்பு பணிகள் நான்கு முதல் ஐந்து தினங்களுக்குள் முடிவடைந்து மலைக் கிராம மக்களுக்கு போக்குவரத்து சீர் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.இந்த பணிகளை தொடர்ந்து சேதம் அடந்த சாலையோரங்களில் காங்கிரிட் சுவர் எழுப்பி சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என்றும் நெடுஞ்சாலைத்துறயைினர் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: