குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி ஓடைகுளத்தை தூர் வார வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

குத்தாலம்:  குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் 10 ஆண்டாக தூர்வாரப்படாத ஓடைகுளத்தை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சி தென்நச்சினார்குடியில் உள்ளது ஓடைகுளம். இந்த ஓடைக்குளமானது தூர்வாரியும் சுத்தம் செய்தும் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் 10-வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகளும், நாணல்களும் படர்ந்து காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து வழிந்து வெளியேறும் நீர் அந்த ஓடை குளத்திற்கு வருகிறது. குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளுடன், நீரும் சேர்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள ஓடை குளத்தை தூர்வாரியும் சுத்தம் செய்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: