SSLV D1 ராக்கெட் தாயாரிப்புக்கு மென்பொருள் தயாரித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள்: திட்டம் தோல்வியுற்றது வேதனை அளித்தாலும் முயற்சி தொடரும்

மதுரை: சென்சார்களில் ஏற்பட்ட பழுது காரணமாக தோல்வியை சந்தித்த SSLV D1 ராக்கெட் தாயாரிப்புக்கு மென்பொருள் தயாரித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள் திட்டம் தோல்வியில் முடிந்தது வேதனை அளித்தாலும் அடுத்த முயற்சியில் நாசாவில் பங்குபெற போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வர்த்தக செயற்கை கோள்கள் உள்ளிட்ட எடை குறைந்த செயற்கை கோள்களை புதிய வகை SSLV D1 ராக்கெட் நேற்று காலை ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் தயாரிப்பதற்கான மென்பொருளை தயாரித்த மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பத்து மாணவிகள் செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் காட்சி நேரில் கண்டது வியப்பை அளித்ததாக தெரிவித்தனர். செயற்கைகோள்களில் இருந்து பெறப்படும் சிக்னல் துண்டிக்கப்பட்டது. மிகுந்த வேதனை அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர்கள்  அடுத்த முயற்சியில் நாசாவில் பங்கு பெற போவதாகவும் அந்த முயற்சியில் முழுமையாக வெற்றியை பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

500 கிலோ எடைக்கு உட்பட்ட செயற்கைகோள்களை முதன்முறையாக சுமந்து சென்ற SSLV D1 ராக்கெட் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த 750 மாணவிகள் இணைந்து உருவாக்கிய Azaadisat மற்றும் EOS-02 இரண்டு எஅடை குறைந்த செயற்கைோள்களை சுமந்து சென்றது. இரண்டு செயற்கை கோளுடன் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக அறிவித்த இஸ்ரோ செயற்கை கோள்களை இனி பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவும் பணியில் பங்கு கொண்டதற்காக பள்ளி மாணவிகள் 10 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

Related Stories: