அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்

ஃபுளோரிடா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது; ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெற்கு ஃப்ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த சோதனை அவசியமற்றது. முறையற்றதும் கூட. 2024ம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக விரும்பாத தீவிர டெமாக்ரேட் கட்சியினரின் தாக்குதல் இது. நீதி அமைப்பை ஆயுதமாக்கி உபயோகிக்கின்றனர் எனவும் இது குறித்து குற்றம் சாடியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து ஃபுளோரிடாவில் உள்ள தனது ஆடம்பர இல்லத்திற்கு சில ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை தன்னுடன் டிரம்ப் கொண்டு சென்றவற்றை பற்றி இந்த சோதனை நடைபெற்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. ட்ரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து எஃப்.பி.ஐ தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த சோதனை குறித்து எஃப்பிஐ இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Related Stories: