தொடரும் போர் பதற்றம்: சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகை..!

தைபே நகரம்: சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த 3ம் தேதி சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி தைவான் சென்றார். 25 ஆண்டுக்குப் பிறகு தைவான் சென்ற முதல் அமெரிக்க தலைவர் இவர்தான். தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருவதால், பெலோசி பயணத்தை அதனால் ஏற்க முடியவில்லை. அவரை அனுமதித்த தைவானை மிரட்டும் தொனியில், அந்நாட்டை சுற்றி கடல் பகுதியில் 6 இடங்களில் போர் ஒத்திகையை நடத்தியது.

இதன் காரணமாக, தைவான் ஜலசந்தியில் கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என தைவான் ராணுவம் பதிலடு அளித்தது.  ஞாயிற்றுக்கிழமை தாண்டியும், தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்து வருகிறது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் எனவும் பதிலடி அல்ல எனவும் தைவான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீனக் கடலில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: