சிதம்பரம் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு; தண்ணீரில் தத்தளிக்கும் 150 கிராமங்கள்

சிதம்பரம்: சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 150 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. 1500 வீடுகளுக்கு மேல் நீரால் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம் கரையோரம் உள்ள பெரம்பட்டு, கீழகுண்டலப்பாடி, திட்காடுட்டூர், சின்ன காரமேடு, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  இதனையடுத்து தெருக்கள் அனைத்தும் ஆறாக மாறியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் மீட்கப்பட்டு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளத்தால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டது. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, குடிநீர், மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: