கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் எஸ்.லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு துறையில் பணியாற்றும் கூட்டுறவு பயிற்சி முடிக்காத நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 2022-23ம் ஆண்டிற்கான 22வது அஞ்சல் வழி பட்டய பயிற்சி, கூட்டுறவு பயிற்சி  22.8.2022 முதல் தொடங்கப்பட உள்ளது. ஆகவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கூட்டுறவு நிறுவனங்களின் பணிபுரியும் தகுதி வாய்ந்த நிரந்தர பணியாளர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.

விண்ணப்பங்கள் விநியோகம் செய்திட கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு மட்டுமே 17.8.2022ம் தேதி மாலை 05.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இதுவே கடைசி தேதி. விவரங்களுக்கு, காஞ்சிபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.6, வந்தவாசி சாலை, மாவட்ட  கலெக்டர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631 501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசியில்  தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: